சூடான செய்திகள் 1

இஸ்ரேலிய தாக்குதல்களில் மூன்று பலஸ்தீனர்கள் பலி

(UTVNEWS|COLOMBO) -காசா பகுதியின் வடக்கில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். காசாவில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ரொக்கெட் தாக்குதலை அடுத்தே இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

இந் தாக்குதலில் மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

காசா எல்லையில் ஒட்டி ஹெலிகொப்டர் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related posts

டொரோண்டோ விபத்தில் ரேனுகா அமரசிங்கவும் உயிரிழப்பு

கஹகொல்லயில் பஸ்ஸில் தீ பரவியமை பயங்கரவாத தாக்குதல் அல்ல

பயணிகளுக்காக மேலதிகமாக 100 பேருந்துகள் சேவையில்