சூடான செய்திகள் 1

இளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ

(UTV|COLOMBO)-பல பெண்களை ஏமாற்றியமை மற்றும் கையடக்கத் தொலைபேசியில் ஆபாச வீடியோ காட்சிகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாடகை வீட்டில் தங்கியிருந்த தம்பதிகளை வாடகை வீட்டின் உரிமையாளர் திட்டியதாகக்கூறி, தன்கொடுவ பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்வதற்காகச் சென்றுள்ளனர்.

இந்த வீட்டு உரிமையாளர் தங்களை துன்புறுத்துவதாகவும் தங்களின் சுதந்திரத்தை பாதிக்கும் படியாக நடந்துகொள்வதாகவும் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்வதற்காக 26 மற்றும் 20 வயதான இளம் தம்பதியினர் தன்கொடுவ பொலிஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.

இந்த முறைபாட்டைப் பதிவு செய்துகொண்டிருக்கும் போது, குறித்த ஆணின் கையடக்கத் தொலைபேசிக்கு அடிக்கடி பல அழைப்புகள் வந்துள்ளன.

இதனை அவதானித்த பொலிஸ் உத்தியோகத்தர், அந்த அழைப்புக்களுக்கு பதிலளிக்குமாறு கூறியுள்ளார்.

இதன்போது, குறித்த ஆணுடன் வந்திருந்த இளம் பெண்ணுக்கு இந்த நபரின் கள்ளத் தொடர்பு தெரியவந்ததனால் பொலிஸ் நிலையத்திற்குள்ளேயே இருவரும் குழப்பமடைந்துள்ளனர்.

இந்த நபரை பொலிஸார் அழைத்து விசாரித்த போது, இரு வருட காலமாக இந்த பெண்ணுடம் வாழ்ந்துள்ளதுடன், மற்றுமொரு 18 வயதான பெண்ணுடன் தொடர்பு ஏற்படுத்தி, மூன்று நாட்கள் உல்லாசப் பயணம் மேற்கொண்டுள்ளமை தெரியவந்தது.

இதனையடுத்து, பொலிஸார் இவரின் கையடக்கத் தொலைபேசியை பரிசோதித்த போது, இவர் தொடர்பு ஏற்படுத்தியிருந்த பல பெண்களினதும் இவரினதும் ஆபாச வீடியோ காட்சிகள் காணப்பட்டுள்ளன.

இந்த நபர் இரண்டு வருட காலமாக இந்தப் பெண்ணுடன் மணமுடிக்காமல் ஒரே வீட்டில் வாழ்ந்துள்ளதாகவும் வெளிவந்துள்ளது.

பல பெண்களை ஏமற்றியமை மற்றும் ஆபாச வீடியோ காட்சிகள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதோடு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பதவி விலகிய மைதிரி: விஜயதாஸ தலைவராக!

நாட்டில் ஜனநாயக கொள்கைகளை தொடர்ந்தும் பாதுகாக்குமாறு அவுஸ்திரேலியா வலியுறுத்தல்

நுரைச்சோலை நிலக்கரி ஆலையின் ஒரு இயந்திரம் செயலிழந்துள்ளது!