உள்நாடுசூடான செய்திகள் 1

இலஞ்சம் பெற்ற போலீஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது

(UTV | கொழும்பு) – இலஞ்சம் பெற்ற போலீஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது

9,000 ரூபா இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது.

பொலன்னறுவை அலுவலகத்தில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை நடத்துவதற்கு இந்த இலஞ்சம் கோரப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

பொலன்னறுவை பகுதியில் உள்ள முறைப்பாட்டாளரின் வீட்டில் மின்னேரிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் லஞ்சம் பெற்றுள்ளனர்.

சந்தேகநபர்கள் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வலுக்கும் கொரோனா

நாட்டில் 130,000 PCR பரிசோதனைகள்

முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணை இன்றுடன் நிறைவு…