விளையாட்டு

இலங்கை வீரர்களுக்கு 2 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ள தடை

(UTV|COLOMBO)-தினேஷ் சந்திமால், சந்திக ஹதுருசிங்க மற்றும் அசங்க குருசிங்க ஆகியோருக்கு 2 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகளுடன் நடைபெற்ற 2 ஆவது டெஸ்ட் போட்டியின் போது, இலங்கை அணி வீரர்கள் 2 மணித்தியாலங்கள் போட்டியில் கலந்து கொள்ளாது மைதானத்தை விட்ட வௌியேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது, தினேஷ் சந்திமால் பந்தை சேதப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு ஒன்று போட்டி நடுவரால் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை இம்மூவரும் ஏற்றுக்கொண்டதுடன், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உயர் அதிகாரியான மைக்கள் பிளேப் நேற்று இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டார்.

இதனை அடுத்து, இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால், பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க மற்றும் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோருக்கு அடுத்து நடைபெற உள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

குசல் மெண்டிஸ் தனது 06 வது சத்தைப் பதிவு செய்தார்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் மற்றுமொரு சுழற்பந்துவீச்சாளர்

நியூசிலாந்து அணியின் முன்னாள் சகலதுறை வீரருக்கு புற்றுநோய்