உள்நாடு

இலங்கை வரும் சீன தடுப்பூசி சீனர்களுக்கே

(UTV | கொழும்பு) – சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள சினோபாம் கொரோனா வைரஸ் தடுப்பூசியை, இலங்கையில் உள்ள சீன பிரஜைகளுக்கு செலுத்துவதற்கே அனுமதி வழங்கப்பட்டதாக தேசிய ஒளடத ஒழுங்குமுறை அதிகார சபை தெரிவித்துள்ளது.

எனினும், இலங்கை மக்களுக்கு குறித்த தடுப்பூசியை செலுத்துவது தொடர்பில், இதுவரையில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என அந்த அதிகார சபையின் தலைவரான மருத்துவ நிபுணர் கமல் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

அது குறித்து, விசேட குழுவொன்று ஆராய்ந்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சட்டத்தின் ஆதிக்கத்தின் ஊடாக மக்கள் எதிர்பார்க்கும் நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் – விஜேதாச ராஜபக் ஷ

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

நாடு தழுவிய ரீதியில் GMOA தொழிற்சங்க நடவடிக்கையில்