அரசியல்உள்நாடு

இலங்கை வந்தடைந்தார் எஸ். ஜெய்சங்கர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (4) காலை இலங்கை வந்தடைந்தார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமரை சந்தித்து இந்திய வௌிவிவகார அமைச்சர் கலந்துரையாடவுள்ளார்.

மேலும், இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க பதவியேற்றதன் பின்னர் இந்திய அமைச்சர் ஒருவர் இலங்கை வரும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மாயமான சிசிடிவியின் வன்தட்டு – சாய்ந்தமருது பொலிஸார் விசாரணை.

நாளாந்தம் ஒரு கோடி ரூபா நட்டத்தை எதிர்கொள்கிறது – இலங்கை போக்குவரத்து சபை.

மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடை விரைவில் நீக்கம்