உள்நாடு

இலங்கை ரயில் சேவையின் அவசர அறிவிப்பு.

இன்று (10) நண்பகல் 12 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்காத அனைத்து ரயில் நிலைய அதிபர்களும் சேவையில் இருந்து விலகியவர்களாக கருதப்படுவார்கள் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் (2390/28) ரயில்வே சேவையை அத்தியாவசிய சேவையாக அரசாங்கம் அறிவித்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் எஸ்.எஸ்.முதலிகே கடிதம் ஊடாக அறிவித்துள்ளார்.

ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்களால் இன்று அறிவிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் அடையாளம்

இடம்பெயர்ந்த மக்களுக்கும் கொரோனா இடர் கொடுப்பனவு கிடைக்க வழி செய்யுங்கள் -ரிஷாட்

மேலும் 843 பேர் குணம்