உள்நாடு

இலங்கை யாத்திரர்கள் இன்று மீண்டும் இலங்கைக்கு

(UTV|கொழும்பு) – இந்தியா சென்றுள்ள இலங்கை யாத்திரர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர இன்று(18) பிற்பகல் ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானமொன்று புது டில்லி செல்லவுள்ளதாக புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு மதவழிபாட்டிற்காக சென்றுள்ள சுமார் 900 பேரை விசேட விமானம் ஒன்றின் மூலம் அழைத்து வருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் எம்.கே.பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்தார்.

இந்தியாவிலுள்ள தம்பதீவ மதவழிபாட்டிற்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் தடைவிதிப்பிற்கு முன்னர் சென்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மூன்று ஊர்கள் முடக்கம்

தற்போதைய ஜனாதிபதி தனது தேர்தல் வாக்குறுதிகளை கூட மீறியுள்ளார் – சஜித்

editor

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு