உள்நாடு

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று போராட்டத்தில்

(UTV | கொழும்பு) – பொதுமக்களுக்கு தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை வழங்குமாறு கோரி இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று நண்பகல் தமது அலுவலகங்களுக்கு முன்பாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இலங்கை மிசார சபை ஊழியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ரஞ்சன் ஜெயலால் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்;

“.. அரசாங்கத்தின் இயலாமை மற்றும் பலவீனத்தை இலங்கை மிசார சபை மற்றும் பிற அரச ஊழியர்கள் மீது வைக்கும் முயற்சிகளை கண்டிக்கிறோம்.

அமைச்சரவை உள்ள அமைச்சர்கள் இராஜினாமா செய்வதால், விவகாரங்களுக்குப் பதிலளிக்க அமைச்சர்கள் யாரும் இல்லாத நிலையில் நாட்டின் அமைப்பு முறைகள் சரிந்து வருகிறது.

ஒட்டுமொத்த அரசும் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்துகிறார்கள்.

இலங்கை மிசார சபை கணக்குகளால் ஊழியர்களின் சம்பளத்தை கூட கொடுக்க முடியாத நிலையை அடைந்துள்ளது…” எனத் தெரிவித்திருந்தார்.

Related posts

திருமணப்பதிவுக்கான கட்டணத்தில் அதிகரிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே பொது வார்டுக்கு மாற்றம்

editor

மாகந்துரே மதூஷின் இரண்டாவது மனைவி திலினி கைது