விளையாட்டு

இலங்கை மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாம் நாள் ஆட்டம் இன்று

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று(23) இடம்பெறவுள்ளது.

நேற்றைய முதலாம் நாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி தமது முதலாவது இணிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் 2 விக்கட்டுக்களை இழந்து 85 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் திமுத் கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன் அஞ்சலோ மெத்தியூஸ் ஆட்டம் இழக்காதுள்ளார்.

Related posts

ரெய்னாவைத் தொடர்ந்து ஹர்பஜன் சிங் விலகல் – கடும் பயிற்சியில் CSK

தனஞ்சயவின் 7வது டெஸ்ட் சதம்

இங்கிலாந்துக்கு எதிரான  இந்திய அணி அறிவிப்பு