கிசு கிசு

இலங்கை பெண்ணிற்காக மோதும் வெளிநாட்டவர்கள்

(UTVNEWS | COLOMBO) –உனவட்டுன கடற்கரையில் வெளிநாட்டவர்கள் இருவருக்கு இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இலங்கை பெண் ஒருவருடன் ஏற்பட்ட காதல் தொடர்பு காரணமாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய நாட்டவர் ஒருவரும், இத்தாலி நாட்டவர் ஒருவருமே இவ்வாறு மோதலில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த பெண் பிரித்தானிய நாட்டவருடன் காதல் தொடர்பு ஏற்படுத்தி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. பின்னர் அந்த காதல் தொடர்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த பெண் வேறு வெளிநாட்டவருடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்த காதல் தொடர்பு காரணமாக பிரித்தானிய நாட்டவரினால் இத்தாலி நாட்டவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் பிரித்தானிய நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

சிங்கராஜா : 500 மில்லியன் நஷ்டஈடு கோரும் யோஷித

யோஷிதவுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி

5000 ரூபா நாணயத்தாள் ரத்து?