உலகம்

இலங்கை பிரஜைகள் இந்தியாவில் இந்தி மொழியை கற்பதற்கான புலமைப்பரிசில்!

(UTV | கொழும்பு) –

இலங்கை பிரஜைகள், ஆக்ராவில் உள்ள இந்தி மத்திய நிலையத்தில் 2024-25 கல்வி ஆண்டில், இந்தி மொழியினைக் கற்பதற்கான புலமைப் பரிசில்கள் இந்திய அரசாங்கத்தின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சினால் வழங்கப்படுகின்றது. இந்தத் திட்டமானது முழுமையான நிதியுதவியுடன் கூடிய புலமைப்பரிசிலாக காணப்படுவதுடன், இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு இருவழி விமான கட்டணம், உதவித்தொகை, தங்குமிடம் மற்றும் வருடாந்த புத்தகக் கொடுப்பனவு ஆகியவை வழங்கப்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்க்காரியாலயம் கூறியுள்ளது .இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்

2. 21 வயது முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்களில் இந்தி மொழியினை ஆரம்ப/இடைநிலை மட்டத்தில் பயின்றவர்கள் இப்புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதியினைக் கொண்டிருக்கின்றனர். இவ்விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை https://hcicolombo.gov.in/what என்ற தளத்தில் பெற்றுக்கொள்ளமுடியும்.

இலங்கையைச் சேர்ந்த தகுதிவாய்ந்த மாணவர்கள் முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவங்களுடன் 2024 பெப்ரவரி 26 ஆம் திகதி கொழும்பு 07 கிரகரிஸ் வீதி இலக்கம் 16/2 இல் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தில் (இந்திய கலாசார நிலையம்) நடைபெறும் நேர்முகத் தேர்விற்காக சமூகமளிக்குமாறு கோரப்படுகின்றீர்கள்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சவுதி இளவரசர் மன்னரை கொல்லவும் திட்டமிட்டிருந்தார்

பிரபல பாலிவுட் பாடகர் KK காலமானார்

சந்திரபாபு நாயுடு யார் பக்கமோ? அவர் தான் அடுத்த இந்திய பிரதமர் | அவரின் அறிவிப்பு இன்று!