விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய துடுப்பாட்ட பயிற்சியாளர் நியமனம்

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை  கிரிக்கெட் அணிக்கு துடுப்பாட்டப் பயிற்சியாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் இயன் பெல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 16ஆம் திகதி அணியுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கும் அவர், மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முடிவு வரை இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக செயற்படவுள்ளார்..

முன்னாள் இங்கிலாந்து வீரான இயன் பெல், 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 42.69 சராசரியுடன் 7,727 ஓட்டங்களை பெற்றுள்ளார். இதில் 22 டெஸ்ட் சதங்களை அவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Related posts

இந்திய அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை குழாம்

சவூதி அரேபியா வெற்றியை சுவீகரித்தது

செரீனா வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்