விளையாட்டு

இலங்கை-ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி ஜூன் 7ஆம் திகதி ஆரம்பம்

(UTV | கொழும்பு) – அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இலங்கைக்கான சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி நடைபெறுவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கை அணி அவுஸ்திரேலியாவுடன் மூன்று இருபதுக்கு 20 போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

ஜூன் 7ஆம் திகதி இருபதுக்கு 20 போட்டியுடன் போட்டி தொடங்க உள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கட் அணி இலங்கைக்கு வருகை தந்துள்ளமை இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடிக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தும் என இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

“குறைந்தது $2 1/2 மில்லியன் வருமானத்தை எதிர்பார்க்கிறோம். எல்லாச் செலவுகளையும் குறைக்கும்போது நமக்கு ரூ. 100 மில்லியனை நெருங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது” என இலங்கை கிரிக்கெட் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை வலைப்பந்தாட்ட அணி தென்கொரியா பயணம்

இலங்கை கிரிக்கட் தேர்தல் இன்று

பாகிஸ்தான் அணிக்கு 148 என்ற வெற்றி இலக்கு நிர்ணயம்