விளையாட்டு

இலங்கை அணி  2 விக்கட்டுக்களால்  வெற்றி

(UTV|கொழும்பு) – இலங்கை பதினொருவர் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான ஒருநாள் பயற்சி கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி 2 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

கொழும்பு பீ சரா ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 43.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 282 ஓட்டங்களை பெற்றது.

மேற்கிந்திய அணிகள் சார்பில் டெரன் பிராவோ 100 ஓட்டங்களை அதிகூடுதலாக பெற்றுக்கொடுத்தார்.

இதற்கமைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 47.3 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் உப்புல் தரங்க 120 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

Related posts

அவுஸ்திரேலியா – நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்!

ஆசிய கிண்ண போட்டிகள் இரத்து

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தனிமைப்படுத்தலுக்கு