உள்நாடு

இலங்கையை அச்சுறுத்தும் ‘டெல்டா’

(UTV | கொழும்பு) – இந்தியாவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனாத் தொற்றின் திரிபான டெல்டா தொற்று, எதிர்வரும் நாட்களில் இலங்கையில் தீவிரமாக பரவும் ஆபத்து உள்ளதென தெரிவித்த மருந்து உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

“உலக நாடுகள் அனைத்திலும் டெல்டா பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், அதிலிருந்து இலங்கையால் தப்பிக்க முடியாது.

தற்போது இலங்கையில் செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகளான அஸ்ட்ராசெனிகா, பைசர், சினோஃபாம் ஆகிய தடுப்பூசிகள், டெல்டா தொற்றைக் கட்டுப்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளதென்றும் தெரிவித்த அமைச்சர், இந்த தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கு டெல்டா தொற்றால் பாரிய அச்சுறுத்தல் ஏற்படாது.

மேலும், தென்அமெரிக்காவின் பெரு நாட்டை மையப்படுத்தி உருவாகிய லெம்டா தொற்று, பல நாடுகளில் வேகமாகப் பரவி வரும் நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவை மையமாகக் கொண்டு, டிப்ஸ்சைலன் என்ற தொற்றும் பல நாடுகளில் பரவி வருகிறது” என சுட்டிக்காட்டினார்.

   

Related posts

ஜனாதிபதி தேர்தல்: அரசியல்வாதிகளுக்கு விடுக்கப்படவுள்ள அதிரடி தடை

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு !

பொருளாதார நெருக்கடி -நோயாளிகளுக்கு இலவச உணவு வழங்குவதில் சிக்கல்