விளையாட்டு

இலங்கையுடன் மோதவுள்ள பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு

(UTVNEWS|COLOMBO) – இலங்கை அணியுடன் மோதவுள்ள பாகிஸ்தான் அணியின் 20 பேர் கொண்ட உத்தேச குழாம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு தலைவர் மிஸ்பாஹ் உல் ஹக்கினால் பெயரிடப்பட்டுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 தொடர் என்பவற்றை பாகிஸ்தானின் கராச்சி மற்றும் லாஹூரில் நடாத்துவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணம் காட்டி இலங்கையின் வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுத்துள்ள நிலையில், குறித்த தொடருக்காக லஹிரு திரிமான்ன தலைமையிலான ஒருநாள் குழாமும், தசுன் ஷானக்க தலைமையிலான இருபதுக்கு-20 குழாமும் இலங்கை கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த இரு தொடர்களுக்குமான பாகிஸ்தான் அணியின் 15 பேர் கொண்ட இறுதி குழாம் எதிர்வரும் சனிக்கிழமை (21) அறிவிக்கப்படவுள்ள நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 20 பேர் கொண்ட உத்தேச குழாமானது பயிற்சி முகாமில் ஈடுபடவுள்ளது.

சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான சுற்றுப்பயணத்தின் முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 27ஆம் திகதி கராச்சியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் உத்தேச குழாம்
சப்ராஸ் அஹமட்
பாபர் அஸாம்
ஆபித் அலி
அஹமட் ஷெஹ்ஸாட்
ஆசிப் அலி
பஹீம் அஸ்ரப்
பக்ஹர் ஷமான்
ஹரிஸ் சுஹைல்
ஹசன் அலி
இப்திகார் அஹமட்
இமாட் வஸீம்
இமாம் உல் ஹக்
மொஹமட் ஆமிர்
மொஹமட் ஹஸ்னைன்
மொஹமட் நவாஸ்
மொஹமட் றிஸ்வான்
சதாப் கான்
உமர் அக்மல்
உஸ்மான் ஷென்வாரி
வஹாப் ரியாஸ்

Related posts

போட்டியில் இருந்து விலகிய அம்புள்தெனிய

ஏழு விக்கெட்டுகளால் இந்தியா வெற்றி

பாடசாலை கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை