வகைப்படுத்தப்படாத

இலங்கையில் முதல்முறையாக நடைபெறும் ஜல்லிக்கட்டு!

(UTV | கொழும்பு) –

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில், திருகோணமலை சம்பூர் பகுதியில் பொங்கல் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் அதில் ஒரு பகுதியாக இன்று ஜல்லிக்கட்டு போட்டி இடம்பெறவுள்ளது.

ஜல்லிக்கட்டுடன் தொடங்கும் இந்த பொங்கல் நிகழ்வானது இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த ஜல்லிக்கட்டு நிகழ்வில் 200 காளை மாடுகளும் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளதால் இதனை பார்வையிடுவதற்காக பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் திருகோணமலைக்கு வருகைத் தந்துள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

புத்தாண்டின் முதலாவது அமைச்சரவை சந்திப்பு

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்…

Prisons Dept. not informed on executions