வணிகம்

இலங்கையில் முதலீடு செய்ய இந்தியா எதிர்பார்ப்பு

(UTV | கொழும்பு) – பல துறைகளில் முதலீடு செய்வதற்கு இந்தியா எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பேக்லே அமைச்சர் பிரசன்ன ரணத்துங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

உணவு பாதுகாப்பு, மருந்து மற்றும் விவசாய உற்பத்திஇ எரிபொருள் சுத்திகரிப்பு உள்ளடங்களான பல துறைகளில் முதலீடு செய்ய இந்திய முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக உயர்ஸ்தானிகர் கூறினார்.

இதேவேளை வடக்கில் புதிய தொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்தவதற்கும் வர்த்தக நிலையங்களை அமைப்பதற்கும் 25 கோடி ரூபாய் நிதி உதவியை இந்தியா வழங்கியுள்ளது. இதில் மடு யாத்திரை ஆரம்பமாவதற்கு முன்னர் 144 வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டத்திற்கு 30 கோடி ரூபாய் வழங்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியை அடையும் போது சுற்றுலா துறைக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணத்துங்க இதன் போது சுட்டிக்காட்டினார்.

Related posts

சீனா மற்றும் சவூதி அரேபியாவுக்கான விமான சேவை இடைநிறுத்தம்

மூன்று தினங்களுக்கு கட்டணமின்றி பார்வையிடுவதற்கான வாய்ப்பு

ஆசியா பசுபிக் பிராந்தியத்தின் சர்வதேச தொழில் முனைவோருக்கான அமர்வு முதல் தடவையாக இலங்கையில்!