வணிகம்

இலங்கையில் மீன் வளர்ப்பு துறையை அபிவிருத்தி செய்ய 375 மில்லியன் ரூபா நிதி

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் மீன் வளர்ப்பு துறையை அபிவிருத்தி செய்ய 375 மில்லியன் ரூபா நிதி உதவியை தென்கொரிய அரசாங்கம் வழங்கவுள்ளது.

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கல் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சிக்கும், தென்கொரியாவின் கடற்றொழில் அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது இந்த நிதி உதவிக்கான அறிவிப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இரண்டு கடற்றொழில் தொழில்நுட்பக் கல்லூரிகளை இலங்கையில் நிறுவவும் தென்கொரியா இணக்கம் வெளியிட்டுள்ளது.

வடக்கிலும், தெற்கிலும் இந்த கடற்றொழில் தொழில்நுட்பக் கல்லூரிகள் அமைக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

இதற்கு மேலதிகமாக பலநோக்கு கடற்றொழில் துறைமுகங்களை அமைக்கவும் இணங்கியுள்ளது.

இந்த பலநோக்கு கடற்றொழில் துறைமுகங்கள் உடப்பு, சாலை, மாதகல், நெடுந்தீவு மற்றும் தங்காலை முதலான இடங்களில் அமைக்கப்படவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கல் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கைக்கு உலக வங்கியினால் நிதி

BCS அங்கீகாரம் கொண்ட பட்டப்படிப்பு கற்கைநெறிகளை வழங்கும் முதலாவது கல்வி நிறுவனம் IIT

எதிர்வரும் வாரம் முதல் தேங்காய் எண்ணெயைப் பரிசோதிக்க நடவடிக்கை