சூடான செய்திகள் 1

இலங்கையில் தென்கிழக்கில் தாழமுக்கம்-சூறாவளியாக உருவெடுக்கும் அபாயம்

(UTV|COLOMBO) தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக உருவாகிய ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து 25ஆம் திகதி பிற்பகல் 08.30 மணிக்கு வட அகலாங்கு 01.9N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 90.1N இற்கும் இடையில் பொத்துவிலுக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 1050 கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதி வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படும் அதேவேளை இலங்கையின் கிழக்குக் கரையை நோக்கி நகரும் போது ஒரு சூறாவளியாக விருத்தியடைவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் வழங்கப்படும் ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

 

 

 

 

Related posts

தேசிய பாதுகாப்பு நிதியம் – திருத்த சட்டமூலம் பராளுமன்றத்திற்கு

மூன்று நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது

திருகோணமலையில் திடீரென குவிக்கபட்ட இராணுவம்: பலத்த பாதுகாப்பு