இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் ஜப்பான் வெளிவிவகார பிரதி அமைச்சர் அகிகோ இகுவினாவுக்கும் இடையிலான சந்திப்பு ஜெனீவாவில் இன்று புதன்கிழமை (26) இடம்பெற்றது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய நாடுகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜெனீவாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.