வணிகம்

இலங்கையின் நிர்மாணத்துறையின் ஊக்கத்துக்காய் இணையத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது வெபினார் நிகழ்வை INSEE i2i நிலையம் வெற்றிகரமாக ஏற்பாடு

(UTV|கொழும்பு)- இலங்கையின் முன்னணி சீமெந்து உற்பத்தியாளரான INSEE சீமெந்து நிறுவனமானது, இலங்கை பொறியியலாளர் நிறுவகத்துடன் (IESL) இணைந்து, இலங்கையின் கட்டட நிர்மாணத்துறை வரலாற்றில் முதன்முறையாக மாபெரும் இரு பகுதிகளைக் கொண்ட வெபினாரை அண்மையில் வெற்றிகரமாக ஏற்பாடு செய்திருந்தது. ’செயற்படுதிறனை தழுவி சீமெந்து தரத்தினை சர்வதேச அளவில் நிர்ணயம் செய்தல்” (‘Overview of International Cement Standards for Performance- based specifications’) எனும் தலைப்பில் இந்த வெபினார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உள்நாட்டு நிர்மாணத்துறையில் துறைசார் நிபுணர்கள் பங்கேற்று ஒன்லைனில் அறிவுப் பகிர்வு மற்றும் திறந்த புத்தாக்கம் மற்றும் கைகோர்த்த செயற்பாடுகள் பற்றி கருத்துக்களை பகிர்ந்திருந்த முதலாவது வெபினாராக INSEE i2i (innovation to industry) Collaboration நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த இந்த நிகழ்வு அமைந்திருந்தது. INSEE லங்கா என அறியப்படும், சியாம் சிட்டி சீமெந்து (லங்கா) லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் தீர்வுகள் பிரிவின் தலைமை அதிகாரி கலாநிதி. மூஸா பால்பகி பிரதான சொற்பொழிவாளராக உரையாற்றினார். 200க்கும் அதிகமான ஒன்லைன் பங்குபற்றுநர்கள் இதில் பங்கேற்றிருந்ததுடன், இதில் பல்கலைக்கழக மாணவர்கள், கல்விமான்கள், பொறியியலாளர்கள், ஒப்பந்தக்காரர்கள், உள்நாட்டு சீமெந்து மற்றும் கொங்கிறீற் உற்பத்தியாளர்கள் மற்றும் சுவிட்சர்லாந்து, ஜேர்மனி, ஐக்கிய இராஜ்ஜியம், பங்களாதேஷ், இந்தியா, தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்நாம் மற்றும் இலங்கை உட்பட 9 நாடுகளின் அரசாங்கம் மற்றும் இதர நிபுணத்துவ அமைப்புகளின் அங்கத்தவர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர். இந்த அறிவு பகிர்வு நிகழ்வில் வழமையாக இடம்பெறும் நிர்மாணத்துறைசார் கருத்தரங்குகளுக்கு மாறாக, மொத்தமாக பங்கேற்றிருந்தவர்களில் பதினெட்டு சதவீதமானவர்கள் பெண்கள் என்பது பிரதானமாக குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாகும்.

பிரதான கருத்துப் பகிர்வு நிகழ்வைத் தொடர்ந்து, குழுநிலை கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் சிவில் பொறியியல் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் – பேராசிரியர். அனுர நானயக்கார, பேராதனை பல்கலைக்கழகத்தின் சிவில் பொறியியல் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியரும் இலங்கை பொறியியல் நிறுவகத்தின் சிவில் பொறியியல் பிரிவுசார் கழகத்தின் தவிசாளருமான – பேராசிரியர் ரஞ்சித் திசாநாயக்க, INSEE சீமெந்து ஸ்ரீ லங்காவின் சந்தைப்படுத்தல், விற்பனை மற்றும் புத்தாக்கப் பிரிவின் நிறைவேற்று பிரதித் தலைவர் ஜான் குனிக் மற்றும் பிரதான வளவாளராக INSEE சீமெந்து ஸ்ரீ லங்காவின் தயாரிப்புகள் மற்றும் தீர்வுகள் பிரிவின் தலைமை அதிகாரி கலாநிதி. மூஸா பால்பகி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த வெபினாரில் கலாநிதி. மூஸா பால்பகி கருத்துத் தெரிவிக்கையில், ”நிலைபேறான சீமெந்து மற்றும் கொங்கிறீற் அடிப்படையிலான தீர்வுகளை தயாரிப்பதற்கான பகிரப்பட்ட அறிவுப் பகுதியை உருவாக்குவதைப் பற்றியதாக இந்நிகழ்வு அமைந்துள்ளது. தேவைகள் நிறைந்த இந்த காலப்பகுதியில், எமது டிஜிட்டல் ஆற்றல்களை பயன்படுத்தி – INSEE i2i Collaboration நிலையத்தினால் மாதாந்தம் ஏற்பாடு செய்யப்படும் அறிவு பகிர்வு அமர்வு, ஒன்லைன் கட்டமைப்புக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. Covid-19 தொற்றுப் பரவும் காலப்பகுதியில் துறைசார்ந்தவர்களுக்கு மிகவும் பயனளிப்பதாக இந்த அமர்வு அமைந்துள்ளது. உள்நாட்டு நிர்மாணத்துறைக்கு சர்வதேச நியமங்களை உள்வாங்கி, இளம் மாணவர்கள், துறைசார் நிபுணர்கள், கல்விமான்கள், வடிவமைப்பாளர்கள், மேசன்மார், ஒப்பந்தக்காரர்கள், பொறியியலாளர்கள் மற்றும் தனியார் மற்றும் அரச நிறுவனங்களைச் சேர்ந்த அங்கத்தவர்களை ஈடுபடுத்தி துறையை மீளமைப்பதில் எம்மை அர்ப்பணித்துள்ளோம்.” என்றார்.

INSEE i2i Collaboration நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்படும் இந்த அறிவு பகிர்வு அமர்வானது, ஒவ்வொரு மாதமும் இறுதி வியாழக்கிழமைகளில் இடம்பெற்று வருகின்றன. 2018 ஜுன் மாதம் முதல் IESL உடன் இணைந்து INSEE ஏற்பாடு செய்து வரும் இந்த நிகழ்வில், ஒவ்வொரு அமர்விலும் இந்த துறையை சார்ந்த சுமார் 150க்கும் அதிகமானவர்கள் பயன் பெற்றுள்ளனர். இந்த அமர்வின் போது பங்கேற்பவர்களின் அனுபவம் மற்றும் அறிவு பகிர்வு ஆகியவற்றை மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படுவதுடன், இலங்கையின் நிர்மாணத்துறையை ஏனைய பல துறைகளுடன் இணைப்பை ஏற்படுத்தவும் வாய்ப்பளிக்கின்றது. இந்நிலையில் தற்போது டிஜிட்டல் கட்டமைப்பினூடாக இதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஒன்லைனில் பங்கேற்றவர்களுக்கு யான் குனிக் கருத்துத் தெரிவிக்கையில், ”புத்தாக்கம் மற்றும் நிலைபேறாண்மை ஆகியவற்றினூடாக முன்னிலை வகிக்கும் INSEE ஐச் சேர்ந்த நாம், இலங்கையின் நிர்மாணத்துறையின் மதிநுட்பமான எதிர்காலத்தை கட்டமைப்பதில் கவனம் செலுத்துகின்றோம். புதிய தயாரிப்பு தீர்வுகள், ஆய்வுகள் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பில் நாம் எமது சொந்த கொள்கைகள் மற்றும் சிந்தனைகளை தினசரி சவால்களுக்கு உட்படுத்துகின்றோம். இதனூடாக சிறந்த நிலையை எய்துவது எமது நோக்காகும். எமது நிறுவனத்தின் பாரிய சொத்தாக எமது ஊழியர்கள் அமைந்துள்ளதுடன், இலங்கையர்கள் மத்தியில் அபிமானத்தை வென்ற INSEE சங்ஸ்தா மற்றும் மஹாவலி மரைன் ப்ளஸ் ஆகிய சீமெந்து நாமங்களை உற்பத்தி செய்வதிலும் பிரதானமானவர்களாக அமைந்துள்ளனர். இதன் காரணமாக நாம் எமது ஊழியர்களின் அறிவு மற்றும் திறன்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளதுடன், இதனூடாக எமது ஊழியர்களின் எதிர்காலத்துக்கு சிறந்த பொருாதாரம் மற்றும் வாழ்க்கையை உருவாக்கிக் கொடுக்க எதிர்பார்க்கின்றோம். ”வாழ்க்கைக்கான பிணைப்பு” – வாழ்நாளுக்கு பெறுமதியான வாழ்க்கைக்கான நிர்மாணம்” (‘Build for Life’ – building a life worth living”.) என்பதில் INSEE ஐச் சேர்ந்த நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என்றார்.

Related posts

கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த முச்சக்கர வண்டிகளுக்கு “பயணிகள் பாதுகாப்பு கவசங்களை” வழங்கும் HNB Finance

இலங்கை வங்கி துருனு திரிய கடன் திட்டத்தின் கீழ் 664 பேருக்கு கடன்…

தேசிய பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்