வகைப்படுத்தப்படாத

இலங்கையின் சில இடங்கள் உலக பாரம்பரிய அந்தஸ்த்தை இழக்கும்

(UDHAYAM, COLOMBO) – உலக பாரம்பரிய தளங்களாக அறிவிக்கப்பட்ட இலங்கையின் சில இடங்கள் அந்த அந்தஸ்த்தை இழக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார ஒழுங்கமைப்பு எச்சரித்துள்ளது.

கல்வியமைச்சர் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.

தம்புள்ளை பொற்கோவில் மற்றும் காலி கோட்டை என்பன அவற்றுள்ள உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பிரதேசங்களை இலங்கையின் தொல்பொருள் திணைக்களம் முறையாக பராமரிக்காமையே இதற்கான காரணம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் குறித்தப் பகுதிகளை அபிவிருத்தி செய்து பேணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ජුනි මාසයේ උද්ධමනය පහළට

அம்பாறை-அக்கரைபற்று பிரதேச சபை உத்தியோகபூர்வ முடிவுகள்

Hearing of FR petitions against Hemasiri and Pujith postponed