வணிகம்

இலங்கைப் போக்குவரத்து சபைக்கு புதிய பேருந்துகள்

(UTV|கொழும்பு)- இலங்கைப் போக்குவரத்து சபைக்கு புதிய பேருந்துகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள இந்திய கடன் உதவியின் கீழ் இலங்கைப் போக்குவரத்து சபைக்கு புதிய பேருந்துகளை கொள்வனவு செய்யப்படவுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

இதன்படி, 50 தொடக்கம் 54 ஆசனங்களைக் கொண்ட 400 புதிய பேருந்துகளைளும் 32 – 35 ஆசனங்களைக் கொண்ட 100 புதிய பேருந்துகளும் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சரால் சமர்பிக்கப்பட்ட பரிந்துரைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts

தொடர்ச்சியாக குறைவடைந்து வரும் தேயிலை விலை…

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண விவசாயிகளுக்கு நட்டஈடு

சிறிய நடுத்தர தொழிற்துறையினரின் பொதியிடல் முயற்சிகளுக்கு அரசாங்கம் நேரடி உதவி – அமைச்சர் ரிஷாட்.