உள்நாடு

இலங்கைக்கு சீனாவின் மற்றுமொரு உதவி

(UTV | கொழும்பு) – இலங்கையின் நிலைமையை சீன அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நேற்று (21) இலங்கைக்கான சீனத் தூதுவரை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சீன செஞ்சிலுவைச் சங்கத்தின் நேரடி ஆதரவு உட்பட சாத்தியமான அனைத்து உதவிகளையும் சீன அரசாங்கம் வழங்கும் என்று அவர் நம்புகிறார்.

அதன்படி, 5,000 மெட்ரிக் தொன் அரிசி, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதாக சீனா உறுதியளித்துள்ளது.

யுனான் மாகாணம் இலங்கைக்கு 1.5 மில்லியன் உணவுப் பொட்டலங்களை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.

வெளிவிவகார செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சீன தூதரக அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Related posts

சுகாதார விதிமுறைகளை மீறிய 23 பேர் கைது

பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி நந்தசேன காலமானார்

மீண்டும் தேர்தல் களத்திலிருந்து வௌியேறினார் சாள்ஸ் நிர்மலநாதன்

editor