வகைப்படுத்தப்படாத

இலங்கைக்கு சார்க் வலய செயலாளர் நாயகம் பாராட்டு

(UDHAYAM, COLOMBO) – நெருக்கடிகளுக்குத் தீர்வு கண்டு மின்சக்தித் துறையை வலுப்படுத்தி முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கத்தினால் முடிந்துள்ளமை இலங்கைக்கு வெற்றியாகுமென்று சார்க் அமைப்பின்செயலாளர் நாயகம் எச்.எவ்.அம்ஜித் ஹுசைன் பி. சியால் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுடன் மின்சக்தி அமைச்சில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் செயலாளர் நாயகம் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

சார்க் வலய நாடுகளுக்கு இடையே ராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்துவது இந்த சந்திப்பின் நோக்கமாகும். நிலைபேறான எரிசக்தியை விரிவுபடுத்துவதற்கு சார்க் நாடுகளுக்கு இடையே நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எரிசக்தி நெருக்கடிக்குத் தீர்வாக இது அமையும் என்றும் செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

Related posts

செங்கலடி ஸ்ரீ சித்தி விநாயகர் தேர்

நோட்டனில் ஆணின் சடலம் மீட்பு

Premier summoned before PSC