உள்நாடு

“இலங்கைக்கு சாத்தியமான எல்லா வழிகளிலும் இந்தியா உதவியது”

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தில் மட்டும் இந்தியா 3.8 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு உதவியாக வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை என்ற தலைப்பில் தாய்லாந்தில் இடம்பெற்ற உரையின் முடிவில் எழுப்பப்பட்ட தொடர் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிதி உதவி – கடன் வசதிகள் மற்றும் அந்நிய செலாவணி ஆகிய முறைகளின் கீழ் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாக எஸ்.ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக வழங்கக்கூடிய எந்தவொரு உதவியையும் வழங்க இந்தியா தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடல் வீதிக்கு பூட்டு

முட்டை விலையில் மீண்டும் மாறும்

சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடும் பாராளுமன்ற சிறப்புரிமை குழு!