உள்நாடு

இலங்கைக்கு அடுத்தாண்டு கொரோனா தடுப்பூசி

(UTV | கொழும்பு) – உலக சுகாதார ஸ்தாபனத்தால் இலங்கைக்கு பெற்றுகொடுக்க தீர்மானித்துள்ள, கொரோனா தடுப்பூசிகளை நோய் தொற்றால் அதிக ஆபத்தை எதிர்நோக்க கூடியவர்களுக்கே முதலில் வழங்க தீர்மானித்துள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அதாவது, நீரிழிவு, இருதய நோய், புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு என்பவற்றுடன் கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளாகி, ஆபத்தான நிலையில் இருக்கும் நபர்களுக்கு தடுப்பூசிகளை முதலில் வழங்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசிகளை அடுத்த ஆண்டு முதற்பகுதியில் இலங்கைக்கு இலவசமாக பெற்றுகொடுக்க, உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

Related posts

“02 மாதங்களில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்படும்” இராஜாங்க அமைச்சர்

ஜனாதிபதி அநுர, ரணில் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாக்களித்தனர்

editor

அனைத்து பிரஜைகளுக்கும் புதிய அடையாள அட்டை விரைவில்