சூடான செய்திகள் 1

இரு பெண் பாலியல் துன்புறுத்தல் வழக்கு: வீடியோ தொடர்பாடல் மூலம் விசாரணை

(UTVNEWS | COLOMBO) – இரு பெண் சுற்றுலா பயணிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானமை தொடர்பாக வீடியோ தொடர்பாடல் (Video conferencing) மூலம் வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள கண்டி உயர் நீதிமன்றத்திற்கு, சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதியளித்துள்ளது.

வரலாற்றில் முதன் முறையாக கடந்த வாரம்,வழங்கப்பட்ட இவ்வனுமதி இலங்கையின் சட்டத் துறையில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகின்றது.

கடந்த 2016ஏப்ரல் 14ஆம் திகதி,கண்டியில் வைத்து இரண்டு பிரித்தானிய பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானமை தொடர்பில் (வழக்கு B/38162)) நீதிமன்றத்தில் இடபெற்ற அடையாள அணிவகுப்பில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட இருவரும் லண்டனிலிருந்து கண்டி உயர் நீதிமன்றத்திற்கு ஜூலை 23,24,25ஆம் திகதிகளில் திட்டமிடப்பட்ட வகையில் வழக்கில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் விடுத்த கோரிக்கைக்கு அமைய,இவ்வழக்கு விசாரணைகளை வீடியோ தொடர்பாடல் மூலம் மேற்கொள்ள சட்ட மா அதிபர் திணைக்களம் அனுமதி வழங்கியது. .

Related posts

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்து

UPDATE-ரயில்வே எஞ்சின் சாரதிகளின் தொழிற்சங்கப் போராட்டம் இடைநிறுத்தம்

பெரும்பாலான பகுதிகளில் அதிக வெப்பத்துடனான வானிலை…