உள்நாடு

இருபது : சர்வஜன வாக்கெடுப்புத் திருத்தங்கள் உள்ளடக்கப்பட மாட்டாது

(UTV | கொழும்பு) – இருபதாவது திருத்த சட்டமூலம் பாராளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்படும்போது, சர்வஜன வாக்கெடுப்பைக் கோரும் திருத்தங்கள் உள்ளடக்கப்பட மாட்டாது என நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், எதிர்வரும் 21ஆம் திகதி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பாராளுமன்றத்துக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் நீதி அமைச்சு கூறியுள்ளது.

மேலும், 20ஆவது திருத்த சட்ட மூலம் தொடர்பில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் ஏற்கனவே உயர்நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த திருத்தங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதானால், பாராளுமன்ற உறுப்பினர்களின் இணக்கப்பாட்டுடன் அதனை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

SLFP : மே தினக் கூட்டம் தொடர்பில் இன்று தீர்மானம்

ஜுவைரியா மொஹிதீனுக்கு 2020 Front Line Defenders விருது

மதுசார பாவனை வீழ்ச்சி