சூடான செய்திகள் 1

இராஜாங்க அமைச்சரின் சர்ச்சை!!!

(UTV|COLOMBO) கொக்கேய்ன் பயன்படுத்தும் அமைச்சர்கள் குறித்த பட்டியலை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இதுவரை தமக்கு வழங்கவில்லை என சாபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற  அமர்வு ஆரம்பித்த வேளை அவர் இதனை அறிவித்துள்ளார்.

நேற்றைய தினம் பிரதி சபாநாயகரும் இது தொடர்பில் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஐக்கிய தேசிய கட்சி, அவைத்தலைவர் லக்ஸ்மன் கிரியெல்ல தலைமையில் குழுவொன்றையும் நேற்றைய தினம் நியமித்தது.

அந்த குழுவில் வாக்குமூலம் வழங்குவதற்காக நாளை காலை 9.30 மணிக்கு இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அழைக்கப்பட்டுள்ளார்.

 

 

 

Related posts

சட்டவிரோதமாக போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த ஒருவர் கைது

UPDATE-மஹிந்தவின் மேன்முறையீட்டு மனு மீதான உச்ச நீதிமன்ற விசாரணை 30 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

அங்கொட லொக்காவின் கைவிரல் அடையாளங்கள் இந்தியாவிற்கு