வகைப்படுத்தப்படாத

இரவு நேர அஞ்சல் தொடரூந்து சேவை இரத்து

(UDHAYAM, COLOMBO) – பதுளை – கொழும்பு இரவு நேர அஞ்சல் தொடரூந்து சேவை இன்றையதினம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடரூந்து கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல் தொடரூந்து தடம்புரண்டதையடுத்து, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் மற்றும் கொட்டகலைக்கும் இடையில் உள்ள பாலத்துக்கு அருகில் இந்த தொடரூந்து இன்று அதிகாலை 2.00 மணியளவில் தடம்புரண்டுள்ளது.

4 பெட்டிகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், தொடரூந்து பாலமும் உடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சேதமடைந்த பெட்டிகளை அகற்றி தொடரூந்து பாதையை சீர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தொடரூந்து பாதை வழமைக்கு திரும்பும் வரை மலையக தொடரூந்து போக்குவரத்து சேவை ஹட்டன் மற்றும் கொட்டகலை தொடரூந்து நிலைங்ளுக்கு இடையே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொடரூந்து கட்டுப்பாட்டு அறை முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு மேலதிக மருத்துவர்கள் , மருத்துவ ஊர்திகள் மற்றும் மருந்து வகைகள்

நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் அனைத்து மக்களினதும் பொருளாதார சமூக வளர்ச்சிக்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டுகிறது – பிரதமர்

வயிற்று வலி எனக்கூறி சிகிச்சைக்கு வந்த நபரின் வயிற்றில் 10 கிலோ எடையுடைய கட்டி!