உள்நாடு

இரண்டு கோடிக்கும் பெறுமதியுடைய ஹெரோயினுடன் ஒருவர் கைது

(UTV | கொழும்பு) – இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயினுடன் 40 வயதான சந்தேக நபர் இராஜகிரிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (16) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு பொதிகளில் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 2 கிலோ 245 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவர் கொழும்பு போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Related posts

அபிவிருத்தித் திட்டங்களின் ஊடாக வறுமையை ஒழிக்க வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor

லங்கா சதொச 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது

இரத்தினபுரி கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை மூடப்படும்