உள்நாடு

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் திங்கள் முதல் சாரதி உரிமம்

(UTV | கொழும்பு) –   மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (DMT) நவம்பர் 14 திங்கட்கிழமை முதல் சாரதி உரிமங்களை வழங்கத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ சாரதி உரிம அட்டைகள் தபாலில் அனுப்பப்படும் என்று மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏறக்குறைய 600,000 பேருக்கு தற்காலிக உரிமம் வழங்கப்பட்டுள்ளது மற்றும் உரிம அட்டைகள் விநியோகம் எதிர்வரும் வாரங்களில் முடிக்கப்படும்.

அதிகாரப்பூர்வ உரிமங்களை அச்சிடுவதற்கு அட்டைகள் இல்லாததால், கடந்த இரண்டு ஆண்டுகளாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தற்காலிக உரிமங்களை வழங்கத் தொடங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மதுபான போத்தல்களுக்கும் QR முறைமை

ஜனாதிபதி தேர்தல் – அச்சிடும் பணிகள் நிறைவு.

MCC உடன்படிக்கையை இரத்து செய்ய தீர்மானம்