விளையாட்டு

இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்திய தீவுகள் முன்னிலையில்

(UTV | மேற்கிந்திய தீவுகள்) –   இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இடம்பெற்று வருகின்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானித்திருந்தது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் சகல விக்கெட்களை இழந்து 354 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இலங்கை அணி சார்ப்பில் சுரங்க லக்மால் 4 விக்கெட்களையும், துஷ்மந்த சமீர 3 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை இரண்டாம் நாள் ஆட்ட முடிவு வரையில் 3 விக்கெட்களை 136 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

Related posts

பொது மன்னிப்பு வழங்கிய ஐசிசி

IPL தொடரிலிருந்து மிட்செல் முற்றாக நீக்கம்

இருபதுக்கு – 20 உலக கிண்ண குறித்து இன்று இறுதி முடிவு