சூடான செய்திகள் 1

இரட்டை கொலை சம்பவம்- சந்தேக நபருக்கு மரண தண்டனை

(UTV|COLOMBO) – 2012 ஆம் ஆண்டு கஹவத்த, கொடகெதன பகுதியில் தாய் மற்றும் மகளை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் லொகுகம்ஹேவாகே தர்ஷன என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி இரத்தினபுரி, கொட்டகெதன பகுதியில் வைத்து நயனா நில்மினி என்ற 52 வயதுடைய பெண்ணும் 17 வயதுடைய காவிந்யா சதுரங்கி செல்லஹேவா என்ற அவரது மகளும் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் லொகுகம்ஹேவாகே தர்ஷன எனும் ராஜு மற்றும் அவரது மனைவியான அசோக சந்தனி எனும் பட்டி என்பவருக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

சம்பவம் தொடர்பில் இரண்டாவது சந்தேக நபரான குற்றவாளியின் மனைவிக்கு எதிராக போதிய அளவான சாட்சிகள் இல்லாத காரணத்தால் அவர் விடுதலை செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பாகிஸ்தான் பிரஜைகள் ஏழு பேருக்கு ஆயுள்தண்டனை

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலை

சாதாரணதரப் பரீட்சை தொடர்பில் இதுவரை 50 முறைப்பாடுகள்