சூடான செய்திகள் 1

இயந்திரவாள்களை பதிவு செய்யும் பணி பெப்ரவரி 28 வரை

(UTV|COLOMBO) நாட்டின் பாவனையில் உள்ள சகல இயந்திரவாள்களையும் பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பணி பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரை தொடரும் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு அமைவாக பாதுகாப்பு அமைச்சின் தீர்மானத்துக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்க மற்றும் அரசு சார்பு தனியார் துறை நிறுவனங்கள் அல்லது தனிப்பட்ட ரீதியில் பயன்படுத்தப்படும் சகல இயந்திரவாள்களும் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு எடுத்து சென்று அதற்கான அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

அமைச்சர் றிஷாட் உரை — ஊடகவியலாளர்கள் ஊடக தர்மத்தைப் பேணிச் செயற்படுவது இன்றியமையததாகும்…

பாராளுமன்றம் இன்று(24) முற்பகல் கூடுகிறது

இலஞ்சம் பெற்ற போலீஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது