உள்நாடு

இன்றைய வானிலை

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் தற்போது பெய்து வரும் மழை நிலைமை சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென்மேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையுடன் கூடிய காலநிலை தொடரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related posts

உணவு ஒவ்வாமை காரணமாக 28 மாணவர்கள் வைத்தியசாலையில்

அத்தியவசியமற்ற பொருட்கள் இறக்குமதி இடைநிறுத்தம்

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதிக்கு பூட்டு