சூடான செய்திகள் 1

இன்றைய வானிலை…

(UTV|COLOMBO)  சப்ரகமுவ, தென், ஊவா, வடமேல், மற்றும் மேல் மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, ஊவா, மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாகாணங்களில் பலத்த மின்னல் தாக்கத்திற்கும் சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதி தேர்தல் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது

நாடு என்ற வகையில் முன்னோக்கி பயணிப்பதற்கு ஊடக சுதந்திரத்தைப் போன்றே ஊடகங்கள் பொறுப்புடன் செயற்படுவதும் முக்கியம்

அரசாங்கத்திற்கு எதிரான ஜே.வி.பியின் பாத யாத்திரை இன்று களுத்துறையில் ஆரம்பம்