உள்நாடு

இன்று 8 மணி நேர நீர் வெட்டு அமுலில்

(UTV | கொழும்பு) – அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (10) கொழும்பு நகரை சுற்றியுள்ள சில பிரதேசங்களுக்கு 8 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்று(10) இரவு 10 மணி முதல் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்பட உள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 12, 13 ,14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதுடன் கொழும்பு 01 மற்றும் 11 ஆகிய பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

டீசல் தட்டுப்பாடு : முடங்கும் பேரூந்து சேவை

நாளை முதல் நாடளாவிய ரீதியில் முழுநேர நடமாட்ட கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி, அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் காரியாலயம் திறந்து வைப்பு

editor