உள்நாடு

இன்று 24 மணிநேர நீர் விநியோக தடை

(UTV | கொழும்பு) – அத்தியாவசிய சீரமைப்பு பணிகள் காரணமாக, வத்தளை உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று(26) முற்பகல் 10 மணிமுதல் 24 மணிநேர நீர் விநியோக தடை அமுலாக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய, வத்தளை – நீர்கொழும்பு வீதியின் ஒரு பகுதிக்கும், மாபோல பிரதேசத்தின் ஒரு பகுதிக்கும், வெலிகடமுல்ல, ஹெந்தளை வீதி – நாயகந்த சந்தி வரையான அனைத்து கிளை வீதிகளின் பகுதிகளிலும் நீர்விநியோகம் தடைப்படவுள்ளது.

இதேவேளை, அல்விஸ் நகர், மருதானை வீதி, கலஹதுவ மற்றும் கெரவலப்பிட்டியின் ஒரு பகுதிக்கும் நீர் விநியோக தடை அமுலாக்கப்பட உள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

Related posts

தப்லீக் பணியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 08 இந்தோனேஷியர்களும் விடுதலை

editor

CEYPETCO விலை அதிகரிப்பு தொடர்பில் அரசு மௌனம்

நேற்றைய தீர்மானம் கவலைக்குரியது – சுமந்திரன் எப்படி வந்தாரோ அதேபோல துரத்தப்படுவார்.

editor