உள்நாடு

இன்று 12 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு

(UTV | கொழும்பு) – கொழும்பின் பல பகுதிகளில் இன்று (15) 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்று (16) இரவு 10.00 மணி முதல் நாளை (16) காலை 10.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 02, 03, 04, 05, 07, 08, 09 மற்றும் 10 ஆகிய பகுதிகளுக்கு உரிய காலத்தில் நீர் விநியோகம் தடைப்படும்.

கொழும்பில் நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் திட்டம் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related posts

மேலும் 160 பேருக்கு கொரோனா தொற்று

மின் கட்டண திருத்தம் குறித்த அறிவிப்பு நாளை

கைதிகள் தப்பியோட்டம் – 02 கைது