சூடான செய்திகள் 1

இன்று விசேட போக்குவரத்து ஒழுங்குகள்

(UTVNEWS|COLOMBO) – மிரிஹான, நுகேகொடை மற்றும் கோட்டே பகுதியை சுற்றியுள்ள வீதிகளில் இன்று(07) மாலை 6.00 மணி முதல் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டே ரஜமஹா விகாரையின் எசல விழாவின் இறுதி பெரஹெரா காரணமாக இவ்வாறு போக்குவரத்து ஒழுங்குகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி, ஜூபிலி தூண், பாகொட வீதி, பங்களா சந்தி மற்றும் பெத்தகான சந்தியை அண்மித்த வீதிகளில் பெரஹெரா நிறைவடையும் வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

எனவே குறித்த காலப்பகுதியில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிசார் சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts

புஞ்சி பொரள்ளையில் இருந்து மருதானை நோக்கிய வீதியில் கடும் வாகன நெரிசல்

வேட்பாளர்கள் மகா சங்கத்தினரிடம் உறுதியளிக்க வேண்டும்

முச்சக்கர வண்டிகளை நீதி மன்றில் ஒப்படைப்பதற்கு அனுமதி