அரசியல்உள்நாடு

இன்று ரணில் அநுரவுக்கு பாசம் – அநுர ரணிலுக்கு பாசம் – சஜித்

வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க அநுரகுமார திசாநாயக்கவுக்கு அன்பு செலுத்துகின்றார். அநுரகுமார திசாநாயக்க ரணில் விக்ரமசிங்கவுக்கு அன்பு செலுத்துகின்றார். சஜித் பிரேமதாசவாகிய நான் அன்பு செலுத்துவது இந்த நாட்டு மக்களுக்கு மட்டுமே.

தன்னிடம் குறுகிய அரசியலும் டீல்கள் மற்றும் ஒப்பந்தங்களும் இல்லை. இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளும் சந்தர்ப்பவாத அரசியலை நிறுத்த வேண்டும். இன,மத குல, கட்சி பேதங்கள் இன்றி, இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் சரியான தீர்மானத்துக்கு வர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 50 ஆவது மக்கள் வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாச தலைமையில் செப்டம்பர் 13 திகதி மாத்தறையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

40000 ஹெக்டெயார் நிலப்பரப்பில் விவசாயம் செய்தவர்களுக்கு எழுந்த தடைகள் மற்றும் சிக்கல்களினால் ஏற்பட்ட பாதிப்புக்கு நட்ட ஈடு வழங்குமாறு அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்த போதும், அதற்கு நட்ட ஈடு வழங்காமல் ஜனாதிபதி அந்த காணிகளை அரசாங்கத்திற்கு கையகப்படுத்தி, வேறு வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்துமாறு கூறியுள்ளார்.

30 000 பேரை அனாதைகள் ஆக்கி அவர்களுடைய காணிகளை அரசாங்கத்திற்கு கையகப்படுத்துகின்ற முயற்சியை மேற்கொள்கின்ற அமைச்சரவை பத்திரத்தை 21 ஆம் திகதி வெற்றிக்கு பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இரத்து செய்வோம்.

இவ்வாறான தடைகள் காரணமாக 12 போகங்களில் நட்டமடைந்து பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்போம். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஒன்றையும் பெற்றுக் கொடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அத்தோடு நில்வளா கங்கை ஒரு வளமாகும். அதனை மனிதர்களுடைய வளங்களை பாதுகாப்பதற்கு பயன்படுத்த வேண்டும். இந்த சிக்கல்கள் குறித்து சரியாகப் புரிந்து கொண்டு நடைமுறை சாத்தியமான தீர்வினை பெற்றுக் கொடுப்போம்.

விவசாயத்தை வலுப்படுத்தும் வகையில் 50 கிலோ கிராம் உர மூடை ஒன்றை 5000 ரூபாவுக்கு வழங்குவோம். விவசாயத்தில் அனைத்து துறைகளுக்கும் உரம் வழங்குவோம். மீனவர்களுக்கும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கும் நிவாரண அடிப்படையில் எரிபொருளையும் வழங்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மேலும் முழுமையாக வீழ்ச்சி அடைந்துள்ள சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களை மீண்டும் கட்டி எழுப்புவோம். வறுமையை ஒழிப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் புதிய வேலை திட்டங்களையும் முன்னெடுப்போம். அத்தோடு வீடமைப்பு திட்டத்தையும் மீற ஆரம்பிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.

Related posts

அனுரவிற்கு பகிரங்க சவால் விடுத்த திலித் ஜயவீர!

கட்டுநாயக்க விமான நிலையத்தினுள் தனியான 02 விசா கருமபீடங்கள்

ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம் – வாக்களிப்பின்றி நிறைவேற்றம்