விளையாட்டு

இன்று முதல் ICC கிரிக்கெட் கவுன்சில் குழு கூட்டம்

(UTV | கொழும்பு) – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் குழு கூட்டம் இன்று தொடங்குகிறது.

இது ஏப்ரல் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அதிகாரிகள் குழு நேற்று டுபாய் சென்றிருந்தனர்.

இந்த சந்திப்புகள் துபாயில் நடைபெறவுள்ளன.

இலங்கை கிரிக்கெட்டின் தலைவருக்கு மேலதிகமாக, இலங்கை கிரிக்கெட்டின் செயலாளர் மொஹான் டி சில்வா மற்றும் இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

Related posts

தென்னாபிரிக்க அணியின் தலைமையில் இருந்து பிளசிஸ் இராஜினாமா

உலக கிண்ணத்தில் விளையாடவுள்ள இலங்கை வீரர்கள்…

ஸ்பெயின் கால்பந்து அணியின் தலைவருக்கு கொரோனா