விளையாட்டு

இன்று முதல் 2022ம் ஆண்டுக்கான பொதுநலவாய போட்டிகள் பர்மிங்காமில்

(UTV |  இங்கிலாந்து) – 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காமில் இன்று தொடங்குகின்றன.

22வது போட்டியில் 72 நாடுகளில் இருந்து 5,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

தடகளம், பளுதூக்குதல், மகளிர் கிரிக்கெட், ரக்பி, பூப்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் நீச்சல் ஆகியவற்றில் இலங்கையிலிருந்து மொத்தம் 110 வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

பொதுநலவாய போட்டிகளை இங்கிலாந்து நடத்துவது இது மூன்றாவது முறையாகும்.

Related posts

சாதனை படைத்த ரோஹித் சர்மா!

கால்கள் ஊனமுற்ற வீரர்களுக்கான விசேட கரப்பந்தாட்ட செயலமர்வு

நாளை (16) நடைபெறவிருந்த நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் மூன்றாவது டெஸ்ட் போட்டி இரத்து