உள்நாடு

இன்று முதல் 12 இடங்களை மையப்படுத்தி என்டிஜன்

(UTV | கொழும்பு) – மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறும் மற்றும் மேல் மாகாணத்துக்கு உள்நுழையும் 12 இடங்களை மையப்படுத்தி இன்று(29) முதல் கொவிட்-19 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதன்படி கொச்சிக்கடை – தோப்புவ, கொட்டதெனியாவ – படல்கம, நிட்டம்புவ – ஹெலகல சந்தி, மீரிகம – கிரிவுல்ல, தொம்பே –சமனபெத்த, ஹங்வெல்ல – வனஹாகொடை, அளுத்மக – பெந்தர, தினியாவல சந்தி, இங்கிரிய – கெட்டகெதல்ல, பதுரெலிய கலவானை சமன் தேவாலயம் அருகில், மீகஹாதென்ன – அவித்தாவ மற்றும் தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன நுழைவாயிலுக்கு அருகிலும் இவ்வாறு சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அத்துடன் மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுபவர்கள் மற்றும் உள்நுழைபவர்கள் எழுமாறான என்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

Related posts

நாளை 05 மணித்தியால நீர் வெட்டு

அனைத்து சுற்றுலா விடுதிகளும் இன்று முதல் திறப்பு

அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி