உள்நாடு

இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்

(UTV|கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு செல்பவர்களுக்காக விசேட பொது போக்குவரத்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் விசேட பொது போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சகல பேருந்துகளும் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஊடாக மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து மாத்திரமின்றி மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் கீழுள்ள 600 பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

யாழ் பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்புப் போராட்டம்

மத்திய கொழும்பு பகுதியில் 12 பேர் கடமையிலிருந்து விலக தீர்மானம்

ஐ.சி.சி தரவரிசையில் வனிந்து ஹசரங்க முன்னேற்றம்