உள்நாடு

இன்று முதல் மூன்று நாட்களுக்கு வான் சாகச கண்காட்சி

(UTV | கொழும்பு) – இலங்கை விமானப்படையின் 70 ஆம் ஆண்டு நிறைவையொட்டி இன்று முதல் எதிர்வரும் 5ம் திகதி வரையில் வான் சாகச கண்காட்சி இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வானது இன்று(03) முற்பகல் காலி முகத்திடலில் ஆரம்பமாகவுள்ளது.

இதற்காக இலங்கை விமானப்படையினருடன் இந்திய விமானப்படையினரும் இணைந்து வான் சாகசங்கள் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்தியாவின் விமானப்படை மற்றும் கடற்படையினரை பிரதிநிதித்துவப்படுத்தி 23 விமானங்கள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளன.

இலங்கை விமானப்படையின் 70 ஆம் ஆண்டு நிறைவு தினம் நேற்றைய தினம் (02) கொண்டாடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஹரின், மனுஷ உள்ளிட்டோருக்கும் அமைச்சுப் பதவிகள் [முழு விபரம்]

குடும்ப நல உத்தியோகத்தர்கள் பணிபுறக்கணிப்பு

துறைமுக கிழக்கு முனையம் தொடர்பில் உறுதி மொழி வேண்டும் [VIDEO]